168
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகள் நேற்று (05.02.23) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இலங்கையின் நாட்டிலுள்ள கிராமப் புறங்களின் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.
கிராம மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பேருந்துகளை நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
Spread the love