Home இலங்கைதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்ற   எல்.முருகன் மற்றும் அண்ணாமலை  

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்ற   எல்.முருகன் மற்றும் அண்ணாமலை  

by admin

நேற்று புதன்கிழமை(9) இலங்கை  சென்றிருந்த  இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும்  .பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு  சென்றதுடன்
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கும் சென்றுள்ளனா் இவா்களுடன்  யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கரும்  கலந்து கொண்டார்.

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு,இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு,ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினர்.

-அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில்  மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட   பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More