188
மொனராகலை – புத்தளையில் இன்று (10) நண்பகல் 12:11 மணியளவில் 3 ரிக்ரா் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் இந்த அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி, இந்திய பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன. வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் 4.6 ரிக்ரா் அளவு நில அதிர்வும் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜில் 4.7 ரிக்ரா் அளவு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love