215
கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை (11.02.23) உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய இணையமைச்சர் எல். முருகன், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்திய உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love