Home உலகம்தென் ஆப்பிரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை!

தென் ஆப்பிரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை!

by admin

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் பாடகர்களில் ஒருவரான ஏகேஏ என அழைக்கப்படும் கீர்னன் போர்ப்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்ள இவருக்கு தென் ஆப்பிரிக்காவில் பெரும் ரசிகர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் ஏகேஏ தனது நண்பரும், மேலாளருமான மோட்சோனேவுடன் டர்பன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் (11.02.23) இரவு  சென்று பின்னர்  கேளிக்கை விடுதியில் இருந்து வீடு திரும்புவதற்காக காரில் ஏற சென்றபோது இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்ல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை காவற்துறையினர்  தேடி வருவதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More