பெண்களுக்கும், பூமித்தாய்க்கும் வன்முறை செய்யாது வாழ்வோம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தியலில் நூறு கோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இம் முறை உள்ளூர் உணவு தயாரித்து அதன் மூலம் தங்களது வாழ்வியலை நடாத்தி வருகின்ற பெண்களை கொண்டாடுதலும் கெளரவப்படுத்தலும் என்கின்ற அடிப்படையில் அமைகின்றது.
இன்றைய உலக மயமாக்கச் சூழலில் துரித உணவுகளை நம்பியே மக்கள் காணப்படுகின்றனர். அதில் நகரப் பிரதேசங்களில் வெதுப்பக உணவுகளே பாரிய இடத்தினைப் பிடித்துக் கொள்கின்றன, இவ்வாறான சூழலில் எம் உள்ளூர் உணவுகளையும் வாங்கி உண்பதற்கான வாய்ப்பு சிலருக்கேனும் கிடைத்திருப்பதானது மகிழ்ச்சியே. எமக்காக ஆரோக்கியமாகவும் வீட்டுச் சுவைக்கு ஒப்பாகவும் உள்ளூர் உணவுகளை உருவாக்கி தரும் பெண்கள் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர்களே.
அந்தவகையில் எதிர்வரும் 14 திகதி மாலை 4:30 மணிக்கு சீலாமுனைக் கிராமத்தில் உள்ள உள்ளூர் உணவுகளை ஆக்கி அதன் மூலம் வருமானங்களைப் பெற்று வாழ்க்கை நடாத்தி வரும் பெண்களோடு இணைந்து அவர்களுடனான கலந்துரையாடல் மூலமாக அவர்களின் அனுபவங்களை பகிந்து கொள்வதோடு அவர்களைக் கொண்டாடவும் உள்ளோம்.