இலங்கைக்கு கடனுதவியை, சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதி தேவையை எதிர்பார்த்திருக்கும் ஒரு நாட்டிற்கான உதவியை கடனளிபவர் தடுபின் அதனை தடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால் சீனாவின் முறையான உத்தரவாதம் கிடைக்காவிடினும் இலங்கைக்கான கடனை அங்கீகரிக்க சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கையைப் பயன்படுத்தலாம்.
முன்னதாக இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உத்தரவாதத்தை எதிர்பார்த்திருந்தது.
எனினும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள், 10 வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்பு என்ற கொள்கைக்கு இணங்கிய நிலையில் சீனா இரண்டு வருட கடன் மறுசீரமைப்பிற்கு அப்பால் செல்ல மறுத்தது.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசய நாணய நிதியத்தின் நிதியுதவியை எதிர்ப்பார்க்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.