Home இந்தியாராமர் பால வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது!

ராமர் பால வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது!

by admin

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும், இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த 2015 ஆம் ஆண்டு  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை இடம்பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

எனினும், ராமர் பாலம் தொடர்பில் மத்திய அரசு எவ்வித முடிவையும் தெரிவிக்கவில்லை என மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்துள்ளார்.

இதற்கமைய, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுள்ள தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட், ராமர் பாலம் தொடர்பான மனு விரைவாக பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More