Home உலகம்கொள்கலனிலிருந்து  18  புகலிடக் கோாிக்கையாளா்களின் சடலங்கள் மீட்பு

கொள்கலனிலிருந்து  18  புகலிடக் கோாிக்கையாளா்களின் சடலங்கள் மீட்பு

by admin

துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த   சரக்கு லொறியின் ஒன்றின் கொள்கலனிலிருந்து  18  புகலிடக் கோாிக்கையாளா்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆள்நடமாட்டமற்ற பகுதியில் குறித்த லொறி நின்று கொண்டிருப்பது  காவல்துறையினருக்கு   தெரியவந்தது. இதையடுத்து அதனைத் திறந்து  பார்த்த போது,  அதில் 52 பேர் அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில், 18 பேர்  உயிாிழந்து காணப்பட்டுள்ளனா்.

குழந்தைகள் உள்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில்,  அவா்கள்  அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த புகலிடக் கோாிக்கையாளா்கள் என்றும்,  அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை பல்கேரிய  காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More