Home இலங்கைகோப்பாயில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுண் நகைகள் திருட்டு

கோப்பாயில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுண் நகைகள் திருட்டு

by admin

யாழ்ப்பாணம் ,கோப்பாய் – கட்டப்பிராய் பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியையான தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாகவும் , மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த 16 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More