180
நாடாளுமன்ற பதவியில் இருந்து விலக வேண்டாம் என தான், முஜிபுர் ரஹ்மானுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (23.02.23) தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்துக்கு தானே கொண்டுவந்ததாகவும்,. அவரை பலிகடாவாக ஆக்கப்போகின்றனர் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொள்வதற்கு தான் கடுமையாக முயற்சித்ததாகவும் அதனை விட ஒன்றையும் தான் கூறவிரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.
Spread the love