Home உலகம்கிறீஸில் (Greek) இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் பலி!

கிறீஸில் (Greek) இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் பலி!

by admin

கிறீஸில் (Greek) இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்ள்ளனர்.கிறீஸின் (Greek) ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் புகையிரதம் ஒன்று சென்றுகொண் தவேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு புகையிரதம்  ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு புகையிரதங்களும்  நேருக்கு நேர் மோதியதால் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More