166
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆணைக்குழுவிற்கு சுமார் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பது இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சில பரீட்சார்த்திகள் தகுதிகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் அவர்களை தனித்தனியாக பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமைகளால் உறுப்பினர்கள் தெரிவு சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love