Home இலங்கைஎந்தத் தேர்தல் நடந்தாலும் SLPP வெற்றிபெறும் – ஆனால் எது நடக்கப் போகிறது?

எந்தத் தேர்தல் நடந்தாலும் SLPP வெற்றிபெறும் – ஆனால் எது நடக்கப் போகிறது?

by admin

எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபகஸ தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது எனவும், மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வருடங்கள் எனவும் பஷில் ராஜபகஸ குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரம்தான் அரசாங்கத்தினை மாற்ற முடியும் எனவும் பஷில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியு்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More