177
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குனரான சீனா, மார்ச் 6 ஆம் திகதி (06.03.23) அந்நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Spread the love