165
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை(9) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகத்தர்களினால் 200 ‘டைனமைட்’ மற்றும் அதற்கு பயன்படும் 160 அடி நூல் மற்றும் ஏற்றி வைத்து இருந்த பட்டா வாகனம் என்பன நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நாரம்பன பகுதியை சேர்ந்த 35, 54 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Spread the love