Home உலகம் ஒஸ்கார் விருது விழாவில்  வழங்கப்பட்ட விருதுகள்

ஒஸ்கார் விருது விழாவில்  வழங்கப்பட்ட விருதுகள்

by admin

இன்று காலை  அமெரிக்காவின் ஹொலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில்  ஆரம்பமாகியுள்ள  ஒஸ்கார் விருது விழாவில்  சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதினை  ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் பிரண்ட்” திரைப்படம். வென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதினை ”ப்ளாக் பான்தர் : வகாண்டா ஃபாரெவரும் சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான   விருதினை “ தி வேல்” திறைப்படமும் சிறந்த துணை நடிகருக்கான விருதை ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” படத்திற்காக  கே ஹுய் குவானும் வென்றுள்ளனா்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருதை  ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்’ திரைப்படமும் சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான விருதை  ’அன் ஐரிஷ் குட்பை’ எனும் குறும் படமும் சிறந்த துணை நடிகைக்கான  விருதை ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக  ர் ஜேமி லீ கர்டிசும் வென்றுள்ளனா்.

மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான  விருதை வெ ’நவால்னி’ ஆவணப்படமும் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான  விருதை  ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோவும்   வென்றுள்ளன.

அத்துடன் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படமும், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து  பாடலும்  ஒஸ்கார் விருதினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More