நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளது..
விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகத் கத் தவறியமை தொடர்பிலே இவ்வாறு அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினா் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.