யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் , பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக உள நெருக்கீட்டுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள 3 மாடிக் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளான். அதன்போது, பாடசாலைக்கான மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு, அம்புலன்ஸ் மூலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
Spread the love
Add Comment