179
யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவராக தென்னிந்திய பிரபல பட்டிமன்றபேச்சாளர் திருமதி கவிதா ஜவகர் கலந்துகொண்டார்
இளம் தலைமுறையினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா,அல்லது சமூகத்திற்கா என்ற தலைப்பில் சுவாரசியமான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பெற்றோரே என கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி மதன் கோசலை ஆகியோர் வாதிட்டனர், சமூகமே என்ற அணியில் தனியார் நாளிதழ் பத்திரிகை ஆசிரியரும் பாடசாலை அதிபரும் ஆகிய ந. விஜயசுந்தரம் மற்றும் விரிவுரையாளர் செல்வி கு.தயாளினி ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.
Spread the love