198
யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் மூன்றாவது கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் மார்ச் 18ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலை, அம்பன் பிரதேச வைத்தியசாலை மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
Spread the love