இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த விடுதி ஒன்றிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
விடுதி மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியுள்ளது. தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்று தீயைக் கட்டுப்படுத்தியதுடன் அங்கிருந்த 30 பேரை கவனமாக வெளியேற்றியுள்ளனா் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Spread the love
Add Comment