எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேருக்கும் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ள பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அதனை ஒன்றரை வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறையினர் மறுநாள் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , நீதவான் 12 கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருட சிறைத்தண்டனை விதித்து , அதனை ஒன்றரை வருட காலத்திற்கு ஒத்தி வைத்தார்.
Spread the love
Add Comment