மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் சாவக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்ட மன்னார் நகர சபை பொது சிறுவர் பூங்கா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் நகர சபையின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்து பொது சிறுவர் பூங்கா இன்றைய தினம் (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் ஆண்டனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் செயலாளர் நகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் நகர சபை பணியாளர்கள் இணைந்து வைபவரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
மேலும் மன்னார் நகர சபையின் 2022 ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் பஜார் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள ‘மன்னார் நகர சபை நவீன கட்டடத் தொகுதியின்’ வரைபடத்துடன் கூடிய பெயர் பலகை இன்றைய தினம் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மேலும் மனிதநேய சேவையாளரும் மன்னார் மறைமாவட்ட ஆயருமான இறை பதம் அடைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் ஒரு வருட ஞாபகத்தை முன்னிட்டு மன்னார் நகர சபையினால் 35.45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடைத் தொகுதியின் கல்வெட்டுகள் இன்றைய தினம் நகர சபையின் தலைவர் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.