Home இலங்கை வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயஅழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்

வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயஅழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்

by admin

வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயமும்தெய்வச்சிலைகளும்இனந்தெரியாதவர்களென வழமை போன்று கூறப்படும் இனவழிப்பாளர்களால்உடைத்தெறியப்பட்டுள்ளமை26.03.2023 அன்று தெரிய வந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் தமிழ், அல்லது அவர்களது அடையாளங்களுள் ஒன்றான சைவ அடையாளங்கள் நிராகரிக்கப்பட்டுபௌத்தஅடையாளத்திற்குரியது என  ஆக்கிரமிக்கப்படுவதும் அவை சிங்கள பௌத்தர்களின் அடையாளம், அவர்களின் வரலாற்று வாழிடம் என்ற புனைவை உருவாக்கும்  சிறீலங்காவின் பௌத்தமதத்திற்குரிய வகையில் வரலாற்றுத்திரித்தல்களைக் காலங்காலமாகச் செய்து வரும் தொல்லியல்திணைக்களத்தால் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ள பல நூறு தமிழ் தொன்மை மரபு அடையாளச் சின்னங்கள் நிறைந்த இடங்களில் வெடுக்கு நாறி மலையும் ஒன்று.

வெடுக்குநாறிமலையை சிறீலங்காவின் தொல்லியல்திணைக்களம் வழமை போன்று வரலான்றுப்புரட்டுகளாலும், படை வலிமையாலும்நீதித்துறை மற்றும் தொல்லியல்துறையின்  ஆதரவுடனும்  ஆலயபரிபாலனசபையினரைவெளியேற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் இந்த அநியாயம் நடைபெற்றுள்ளது.

இனவாதத்தால் தானே வரவழைத்துக் கொண்டபொருளாதாரப்பேரழிவின் மூலம் உலகையே தன்னை உற்றுப்பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது சிறீலங்கா. அத்துடன் சிறீலங்கா அரசு தனது அன்றாட செயற்பாடுகளுக்கே நிதியின்றித்தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையிலும் கூடத்தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் தமிழர் பிரதேசங்களைப்பௌத்தமயமாக்கும்  வேலைத்திட்டத்திட்டத்தையும் எந்த விதத்திலும் சிறீலங்கா அரசு தளர்த்தத்தயாரில்லைஎன்பதையே இந்த சிலையுடைப்பு தமிழ் மக்கள் மத்தியில் நிரூபித்து நிற்கின்றது. பிச்சையெடுத்தேனும்இனவழிப்பைத் தொடர்வோம் என சிங்களபௌத்த தேசம் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதேவேளைவழமைபோன்றுஉலகமும் அண்டை நாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறானஅழிப்புகளுக்கு எந்த எதிர் வினையுமின்றிசெயலற்று இருக்கின்றன.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை மார்ச் 30 அன்று வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயபரிபாலனசபையினர் வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயஅழிப்புக்கு எதிராக வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். தமிழ் சிவில் சமூக அமையம் இந்த அழிப்புக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தனது ஆதரவையும் பங்களிப்பையும்வழங்குவதுடன் தமிழ் மக்களையும் பரந்த அளவில் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாலயஅழிப்புக்கும் தொடரும் இனவழிப்புநடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்  என்றும் வேண்டி நிற்கின்றது.

(ஒப்பமிடப்பட்டது)

அருட்பணிவீ. யோகேஸ்வரன்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்.

(ஒப்பமிடப்பட்டது)

பொ. ந. சிங்கம்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More