Home இலங்கைமண்டைதீவு சோதனை சாவடியை பலப்படுத்த நடவடிக்கை

மண்டைதீவு சோதனை சாவடியை பலப்படுத்த நடவடிக்கை

by admin

தாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை சாவடியை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை சோதனை செய்வதன் மூலம் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More