Home இலங்கைIMF இன் கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும்

IMF இன் கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும்

by admin

சர்வதேச நாணய நிதியத்தின்  கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும்  நிலை  ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

அறிக்கை  ஒன்றின் மூலம் இதனைத் தொிவித்துள்ள அவா் செல்வந்தர்கள் சிலருக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும்   சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களின் மீது சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும்  குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More