229
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் நெல்லியடி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அண்மை காலமாக நெல்லியடி பகுதியில் இடம் பெற்ற தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் , திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கரவெட்டி கிழக்கு, காட்டுப்புலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நெல்லியடி பகுதிகளில் திருடிய ஒளிப்படக் கருவி, தொலைக்காட்சிப் பெட்டி , இரண்டு காஸ் சிலிண்டர்கள், இரண்டு பவுண் சங்கிலி என்பவற்றை மீட்டுள்ளதாகவும் , தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love