Home பிரதான செய்திகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

by admin

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி  இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறவுள்ள முதலாவது போட்டியில்    நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சம்பியனான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போட்டியிடுகின்றன.

 இன்று போட்டி ஆரம்பமாவதற்கு  முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது  இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை  கிண்ணத்தினை  வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை  கிண்ணத்தினை  வென்றுள்ளது.

மேலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சம்பியன்  கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளன.

ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் மைதானம் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டாக பொதுவான இடத்தில் போட்டி நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More