மன்னாரில் இரு வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(31)மன்னார் மாவட்ட காவல்துறைக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (31) மன்னார் கொன் வன்ற் வீதி மற்றும் ,மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகாமையில் வைத்தும் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் காவல்துறைபட பிரிவுக்கு உட்பட்ட கொன்வன்ற் வீதி மற்றும் மன்னார் தலைமன்னார் வீதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது மன்னார் ஜே.ஆர்.எஸ்.வீட்டுதிட்டம் சின்னக் கடையை சேர்ந்த 37 வயது நபரிடமிருந்து 6 கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவும் அதனைத் தொடர்ந்து கட்டுக்காரன் குடியிருப்பை சேர்ந்த 28 வயது நபரிடம் இருந்து தலைமன்னார் வீதியில் கெப் வாகனத்தின் 10 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சந்தேக நபர்களிடம் காவல்துறையினா் மேலதிக விசாரணை மேற்கொண்ட பின் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் சந்தேகநபர்கள் வாகனங்கள், என்பன மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.