Home இலங்கைமாமனாாின் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

மாமனாாின் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

by admin

கிளிநொச்சி  , கிருஸ்ணபுரம் பகுதியில்  இரண்டு பிள்ளைகளின்   தந்தை  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த 32 வயதான  குறித்த நபா்  இன்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது  அவருக்கும் அவரது   மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக  காவல்துறையினா்  முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More