191
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக காவற்துறையினர் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது, மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பயணித்த இளைஞனை மறித்து சோதனையிட்ட போது இளைஞனிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவற்துறையினர், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
குறித்த இளைஞனை போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொண்டு சென்று இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love