Home இலங்கையாழில். காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு

யாழில். காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு

by admin

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை காவல்துறையினர் 25 மற்றும் 30 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More