Home இலங்கைநங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வா் கைது

நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வா் கைது

by admin

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து வெளிநாடு   செல்ல முயன்ற நால்வா்  துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் –  வேலணை, தொண்டமானாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் சேர்ந்த  25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

 கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறிய சந்தேகநபர்கள்   மறைந்திருந்திருந்துள்ளனா்.  கப்பல் பயணிக்க  தொடங்கிய பின்னா்  கப்பலின் கப்டன், சூயஸ் கால்வாய் அருகே இந்த சந்தேக நபர்களை கவனித்துள்ளதனையடுத்து  கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளாா்.

இதனையடுத்து சந்தேக நபர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More