66
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பொது நிகழ்வு ஒன்றில் புகைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. எனினும் அவர் காயங்கள் ஏதுமின்றி அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.
வாகாயாமா என்ற இடத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் அவர் உரையாற்றவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் போில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தேக நபா் குறித்த தகவல்கள் எதனையும் காவல்துறையினா் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love