Home இலங்கைவியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையா்கள் நாடு கடத்தப்பட்டனா்

வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையா்கள் நாடு கடத்தப்பட்டனா்

by admin

வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக   சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை (19) 23 பேர்  இலங்கையைச் சென்றடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 நவம்பா் மாதம்  303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாமியக் கொடியுடனான  பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்திருந்தது.

வியட்நாமிய கடலோர பாதுகாப்பு படையினர் விபத்துக்கு உள்ளானவா்களை  மீட்டதுடன்  டிசம்பா் மாதம் அவர்களில் 151 பேரை இலங்கைக்கு   திருப்பி அனுப்பியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More