Home உலகம்இலங்கையில் எழுந்துள்ள நிலையே உருவாகும்

இலங்கையில் எழுந்துள்ள நிலையே உருவாகும்

by admin

நாட்டில் ஆட்சியிலுள்ளவர்கள்  உரிய காலத்தில்  தேர்தலை நடத்தாவிட்டால் இலங்கையில் எழுந்துள்ள நிலையே    தமது நாட்டிலும் உருவாகும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.. தமது நாட்டில் உரிய  நேரத்தில்  தேர்தல் நடத்தப்படும் என்ற  பொியதொரு நம்பிக்கையில் தான்  இருப்பதாக  அவா் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாக்குரிமையை தடுத்தால் அவர்கள் வீதிக்கு இறங்கி வன்முறையில் ஈடுபடுவாா்கள் எனவும்  அவர்களுடைய பலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனவும்  தெரிவித்துள்ள அவர்    பாகிஸ்தானில் அதிகாரத்திலுள்ள அரசாங்கம் தோல்வியடைந்து அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதே தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் தேர்தல் பிற்போடப்பட்டால் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More