Home உலகம்இம்ரான் கான் கைது

இம்ரான் கான் கைது

by admin

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து  இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவா் மீது இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடிருந்தது. எனினும் , நாடு முழுவதும்  ஏற்பட்ட  கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்து   விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும்  அவரைக்  கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More