Home உலகம் வசீகரமான திருமண ஆடை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது!

வசீகரமான திருமண ஆடை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது!

by admin

மிக வசீகரமான திருமண ஆடை ஒன்று சுமார் 50,890 படிகங்களுடன்  கின்னஸ் சாதனை படைத்துள்ளது.நான்கு மாத திட்டமிடலுக்குப் பிறகு, ஏப்ரல் 14, 2023 அன்று மிலனில் நடைபெற்ற Sì Sposaitalia Collezioni பஷன் ஷோவில் இந்த ஆடை வெளியிடப்பட்டது.

இந்த ஆடை ஆடம்பர மணப்பெண் பேஷன் பிராண்டான Michela Ferriero-வால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரோவ்ஸ்கி படிகங்களை (Swarovski crystals) அவர்கள் இந்த திருமண ஆடையில் பயன்படுத்தியுள்ளனர்.

வடிவமைப்பாளர்கள் குழு இந்த தைக்கப்பட்ட திருமண ஆடையில் ஸ்வரோவ்ஸ்கி படிகங்களைப் பொருத்த சுமார் 200 மணி நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

கின்னஸ் உலக சாதனை வழிகாட்டுதல்களின்படி, பதிவு முயற்சிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து படிகங்களும் உண்மையானதாகவும் வணிக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான சான்றிதழும் இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45,000 படிகங்களுடன் ஒரு ஆடையை துருக்கியை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More