397
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அச்சுவேலி மேற்கில் உள்ள வீடொன்றினை முற்றுகையிட்டு , தேடுதல் நடத்தினர்.
அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள்கள் நான்கினை கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த இளைஞனையும் கைது செய்தனர். கைது செய்த இளைஞனையும் , மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love