சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற கைதிகள் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இதனை வலியுறுத்தியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் நடாஷா எதிரிசூரிய இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையானது மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாகக் கூறி கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அந்த அமைமப்பு தொிவித்துள்ளது