484
பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட மாணவனிடம் , காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் , குறித்த மாணவன் தனது பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளதாகவும் , பின்னர் தானும் மேலும் சில மாணவர்களும் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் , மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Spread the love