422
வயலில் கட்டப்பட்டு இருந்த மாட்டை அவிழ்க்க சென்ற வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வயலில் கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்க்க சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையன் , வயலுக்கு அருகில் வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டி இழுத்துள்ளார். அதனால் வயோதிப பெண் மயக்க முற்றவுடன் , அவரது நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
மயக்கம் தெளிந்து வயோதிப பெண் எழுந்த போதே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து அது தொடர்பில் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love