Home இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த மருதங்கேணி காவல்துறையினா்

மனிதவுரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த மருதங்கேணி காவல்துறையினா்

by admin

 

மருதங்கேணியில்  நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை  தாக்கியமை தொடர்பில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இன்றையதினம் புதன்கிழமை  நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய  காவல்துறை  உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும் இரண்டு காவல்துறை  உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More