235
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08.06.23) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (07.06.23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை காவற்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொடா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Spread the love