349
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (08.06.23) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (08.06.23) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Spread the love