380
யாழ்ப்பாணம் , கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகமும், எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து சர்வதேச கடல் தினத்தினை முன்னிட்டு, மாணவர்கள் மத்தியில் கடல் சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தி இருந்தன.
அந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும், நிகழ்வு பாடசாலை அதிபர் த.தயானந்தன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கீரிமலை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது .
விழாவில் பிரதம அதிதியாக கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடல்சார் சுற்றுச் சூழல் அதிகாரி ப.சதீஸ்குமார் கலந்து கொண்டதுடன், விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம், எதிர்கால சுற்றுச் சூழல் கழகத்தின் தலைவர் லி.கேதீஸ்வரன் மற்றும் Clean ocean foce இன் வடமாகாணப் பிரதிநிதி ம.சசகரன் ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
Spread the love