கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் நபா் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்கரை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
மாத்தளை அகலவத்தையை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 46 வயதான சந்தேகநபர், மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்துக்குள் துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி தினமும் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, கடந்த புதன்கிழமை (07) ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சந்தேகநபர் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களினால் சந்தேகத்தின் பேரில் அவா் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.