காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.