Home இலங்கை நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – SLPPக்குள் மூக்கை நுழைக்க கூடாது!

நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – SLPPக்குள் மூக்கை நுழைக்க கூடாது!

by admin

பொதுஜனபெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலையிடக்கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி இதற்கு இணங்கினார் என நேற்றைய (14.06.23) சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின தரப்பினர்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஆட்சி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை சந்திப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்ல ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தெரியாமல் அரசாங்க கூட்டத்திற்கு தமது உறுப்பினர்களை அழைப்பது பொருத்தமற்றது என அக்கட்சியின் தலைவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான விசேட கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதன்படி இனிமேல் அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை அழைப்பதாயின் அதனை முதலில் கட்சிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More